தனது கடைசி ஒருநாள் போட்டியில் 158 ரன்கள் குவித்த அலிசா ஹீலி... Guard of Honour கொடுத்த இந்தியா

இந்த போட்டியிடும் ஓய்வு பெறுவதாக கேப்டன் அலிசா ஹீலி அறிவித்திருந்தார். தனது கடைசி ஒருநாள் போட்டியில் 158 ரன்கள் குவித்து அலிசா ஹீலி சாதனை
தனது கடைசி ஒருநாள் போட்டியில் 158 ரன்கள் குவித்த அலிசா ஹீலி... Guard of Honour கொடுத்த இந்தியா
Published on

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையில் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் இரு போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டி பெல்லரைவ் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 409 ரன்கள் குவித்தது. கேப்டன் அலிசா ஹீலி 98 பந்துகளில் 158 ரன்கள் குவித்து அவுட்டானார். பெத் மூனி 84 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார்.

இந்த போட்டியிடும் ஓய்வு பெறுவதாக கேப்டன் அலிசா ஹீலி அறிவித்திருந்தார். ஆகவே தனது கடைசி ஒரு நாள் போட்டியை விளையாடிய அலிசா ஹீலிக்கு Guard of Honour முறையில் இந்திய வீராங்கனைகள் மரியாதை செலுத்தினர். தனது கடைசி ஒருநாள் போட்டியில் 158 ரன்கள் குவித்து அலிசா ஹீலி சாதனை படைத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com