டி20 பிளாஸ்ட் தொடர்: சாம்பியன் பட்டம் வென்றது குளோசெஸ்டர்ஷைல்

முதலில் ஆடிய சாமர்செட் அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய குளோசெஸ்டர் அணி 15 ஓவரில் வெற்றி பெற்றது.
டி20 பிளாஸ்ட் தொடர்: சாம்பியன் பட்டம் வென்றது குளோசெஸ்டர்ஷைல்
Published on

லண்டன்:

இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 லீக் தொடரில் டி20 பிளாஸ்ட் தொடரும் ஒன்று.

இந்நிலையில், டி20 பிளாஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சாமர்செட் மற்றும் குளோசெஸ்டர்ஷைல் அணிகள் மோதின. டாஸ் வென்ற குளோசெஸ்டர்ஷைல் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய சாமர்செட் அணி 19.4 ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் லூயிஸ் கிரெகோரி அரை சதமடித்து 53 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குளோசெஸ்டர்ஷைல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதமடித்தனர்.

இறுதியில், 15 ஓவரில் குளோசெஸ்டர் ஷைல் அணி 129 ரன்கள் எடுத்து வென்றதுடன், கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com