அடுத்த டி20 உலகக் கோப்பையில் விளையாடுவேனா?: மேக்ஸ்வெல் விளக்கம் #GlennMaxwell

நடப்பு டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணியின் ஆல் ரவுண்டரான மேக்ஸ்வெல் நடப்பு தொடரில் சரிவர ஜொலிக்கவில்லை.
அடுத்த டி20 உலகக் கோப்பையில் விளையாடுவேனா?: மேக்ஸ்வெல் விளக்கம் #GlennMaxwell
Published on

மெல்போர்ன்:

நடப்பு டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணியின் ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் நடப்பு தொடரில் சரிவர ஜொலிக்கவில்லை.

வருங்காலத்தில் மேக்ஸ்வெல் விளையாடுவது பற்றியும், அடுத்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா என பலரிடமும் சந்தேகம் காணப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவது என்ற நிலைப்பாட்டில் மேக்ஸ்வெல் உறுதியுடன் உள்ளார். இதுதொடர்பாக மேக்ஸ்வெல் கூறியதாவது:

அடுத்த 12 மாதத்தில் குறைவான அளவிலேயே டி20 போட்டிகள் உள்ளன. வருங்காலம் பற்றி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. தற்போது எந்த முடிவையும் அறிவிக்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.

தொடர்ந்து விளையாடுவது பற்றி முடிவு செய்யும் முன், என்னுடைய உடல்தகுதி மற்றும் விளையாட்டு திறன் எப்படி உள்ளது என தன்னாய்வு செய்யவேண்டும். வருங்காலத்தில் விளையாடுவதற்கான வாய்ப்புள்ளது பற்றி யோசிக்க வேண்டும்.

2028 டி20 உலக கோப்பை தொடர், அதற்கு சில மாதங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளும் வரவுள்ளன. அந்தப் போட்டிகளில் விளையாட நான் தகுதியுடனும், அதிரடியாக விளையாடும் திறமையுடனும் இருக்கிறேன் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com