கம்பீர் தலைமையில் முதல் வலை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்- வைரல் வீடியோ

இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்படுகிறார்.இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
gautam gambhir
Published on

இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று இலங்கை சென்றடைந்தது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார்.

இந்நிலையில் கம்பீர் தலைமையில் முதல் வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டனர். சஞ்சு சாம்சன் மற்றும் துபே ஆகியோருக்கு கம்பீர் ஆலோசனகளை வழங்கினார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்திய அணின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட உள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com