யார்ரா அந்த பையன்.. நான்தான் அந்த பையன்.. 2015-ல் ரசிகர்.. 2025-ல் வெற்றிக்கு வித்திட்ட வீரர்

பிக்பாஷ் லீக் தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் ஓவன் சதம் அடித்து அசத்தினார்.
யார்ரா அந்த பையன்.. நான்தான் அந்த பையன்.. 2015-ல் ரசிகர்.. 2025-ல் வெற்றிக்கு வித்திட்ட வீரர்
Published on

பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்யில் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டரும் நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்த போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் ஓவன், அதிரடியாக விளையாடிய 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார். குறிப்பாக ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல இவர் முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் 2015-ல் ரசிகனாக ஹரிகேன்ஸ் அணியின் வெற்றியை ரசித்த ஓவன், 10 ஆண்டுகளுப் பிறகு (2025) ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல ஒரு வீரனாக களத்தில் ஆடியுள்ளார். இந்த இரு புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com