இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் அரிதான சாதனைப் படைத்த பாகிஸ்தான்

தய்யப் ஆரிஃப் – (57), முகமது தஹா (51), அரஃபாத் மின்ஹாஸ் –(52) அரைசதம் அடித்தனர்.
பாகிஸ்தான் அணி வீரர்கள்
பாகிஸ்தான் அணி வீரர்கள்
Published on: 
Summary

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணியில் அறிமுகமான மூவர் அரிதான சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

பாகிஸ்தான்- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் தய்யப் ஆரிஃப், முகமது தஹா மற்றும் அரஃபாத் மின்ஹாஸ் மற்றும் சகிப் கான் ஆகியோர் அறிமுகம் ஆனார்.

3 அறிமுக வீரர்கள் அரைசதம்

இதில் தய்யப் ஆரிஃப் – (57), முகமது தஹா (51), அரஃபாத் மின்ஹாஸ் –(52) ஆகியோரை அரைசதம் அடித்து முத்திரை படைத்தனர். இதன் மூலம் அரிய சாதனையை படைத்துள்ளனர்.

இதன் மூலம் ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் மூன்று அறிமுக வீரர்கள் அரைசதம் மற்றும் அதற்கு மேல் அடித்த இரண்டாவது நிகழ்வு இதுவாகும். இதற்கு முன்பு 1992-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணியின் கிராண்ட் பிளவர் (82), டேவ் ஹாட்டன் (121) மற்றும் ஆண்டி பிளவர் (59) ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.

பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 434/9

பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 434 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இலங்கை முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

X