ஒரே நாளில் ஆறு சதங்கள்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாறு

சுப்மன் கில் 110 ரன்களும், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 139 ரன்களும் எடுத்தனர்.
ODI Centuries
Published on: 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக ஒரே நாளில் ஆரு சதங்கள் அடிக்கப்பட்டது தனித்துவ வரலாறாக மாறியிருக்கிறது.

கடந்த 27-ஆம் தேதி (செப்டம்பர் 27) இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள், தென்ஆபிரிக்கா - ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன.

ஒரே நாளில் ஆறு சதங்கள்:

அதில், இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜஸ்டின் கிரீவ்ஸ் சதம் விளாசினார். அவர் 101 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு களமிறங்கிய, இந்திய அணியில் கேப்டன் சுப்மன் கில், விராட் கோலி இருவரும் சதம் விளாசி அசத்தினர். சுப்மன் கில் 110 ரன்களும், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 139 ரன்களும் எடுத்தனர்.

இதேபோல் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டேவிட் மில்லர் சதம் விளாசி அசத்தினர். டெம்பா பவுமா 103 ரன்களும், டேவிட் மில்லர் 142 ரன்களும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து நடந்த இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையேயான போட்டியில் இங்கிலாந்து தரப்பில் டாம் பாண்டன் சதம் விளாசினார். அவர் 126 ரன்கள் எடுத்தார்.

தனித்துவ சாதனைகள்:

இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நேற்று ஒரே நாளில் 6 சதங்கள் விளாசப்பட்டு தனித்துவமான சாதனை படைக்கப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும், இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com