

இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. ரிவர்சைடு மைதானத்தில் நடக்கும் இந்த முதல் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
டாம் பாண்டன்- பென் டக்கட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டாம் பாண்டன் 12 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பென் டக்கட் 29 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து வந்த ஜோ ரூட் 52 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுமுனையில் கேப்டன் ஹாரி ப்ரூக் சிறப்பாக விளையாடி 69 பந்தில் 7 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் சேர்த்தார்.
விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் 33 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார். வில் ஜேக்ஸ் ஆட்டமிழக்காமல் 47 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் சேர்க்க இங்கிலாந்து 48.1 ஓவரில் 265 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இங்கிலாந்து அணியைச் சேர்ந்த பேட்ஸ்மேன்கள் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. இலங்கை அணி தரப்பில் அசிதா பெர்னாண்டோ 9.1 ஓவரில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதேபோல் சசிந்து கொலம்பேஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 266 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்து வருகிறது.