ஆர்வக் கோளாறு ரிஸ்வானால் 28 ஓவருக்கு முன்னதாகவே 2 ரிவ்யூவை இழந்த பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி 28 ஓவருக்கு முன்னதாகவே 2 ரிவ்யூவும் முடிந்து விட்டது.நசீம் ஷா வீசிய 3.5 ஓவரில் ரோகித் சர்மாவுக்கு ரிஸ்வானால் ரிவ்யூ கேட்கப்பட்டது.
ஆர்வக் கோளாறு ரிஸ்வானால் 28 ஓவருக்கு முன்னதாகவே 2 ரிவ்யூவை இழந்த பாகிஸ்தான் அணி
Published on

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது.

சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.

இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். அணியின் ஸ்கோர் 121-ஐ எட்டிய போது ரோகித் சர்மா (56 ரன், 49 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) ஷதப்கானின் பந்துவீச்சை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் சுப்மன் கில்லும் (58 ரன், 52 பந்து, 10 பவுண்டரி) வெளியேறினார். அவர் அப்ரிடி வீசிய பந்தை அடித்த போது 'கவர்' திசையில் நின்ற ஆஹா சல்மானிடம் சிக்கினார்.

3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், லோகேஷ் ராகுலும் கைகோர்த்து விளையாடிய போது மழை குறுக்கிட்டது. அப்போது இந்தியா 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த ஆட்டத்திற்கு மாற்று நாள் (ரிசர்வ்) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பதால், இதன்படி பாதியில் நின்று போன இந்த ஆட்டம் மாற்று நாளான இன்று தொடர்ந்து நடைபெற்றது. கேஎல் ராகுலும் விராட் கோலியும் சிறப்பாக ஆடி வருகின்றனர். கேஎல் ராகுல் அரை சதம் அடித்து அசத்தினார்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 28 ஓவருக்கு முன்னதாகவே 2 ரிவ்யூவும் முடிந்து விட்டது. இதற்க்கு முக்கிய காரணம் கீப்பர் ரிஸ்வான். இவரால் தான் 2 ரிவ்யூ-வும் பறிபோனது.

நசீம் ஷா வீசிய 3.5 ஓவரில் ரோகித் சர்மாவுக்கு ரிஸ்வானால் ரிவ்யூ கேட்கப்பட்டது. அது 3-வது நடுவரால் நிராகரிக்கப்பட்டது. இதனை போன்று 27.6 ஓவரில் விராட் கோலிக்கு அவுட்டுக்கான அப்பில் கேட்கப்பட்டது. இதனை கீப்பராக நின்ற ரிஸ்வான் ரீவ்யூ எடுக்குமாறு கேப்டனை கேட்டுக் கொண்டார். இதனால் ரிவ்யூ கேட்கப்பட்டது.

ஆனால் 3-வது நடுவர் அதனை நாட் அவுட் கொடுத்தார். மீதமிருந்த ஒரு ரிவ்யூ-வும் பறிபோனது. இதனால் நெட்டிசன்கள் ரிஸ்வானை ஆர்வக் கோளாறு என திட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com