4வது போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்-டி20 தொடரை கைப்பற்ற ஆர்வம்

டி20 தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.
brook
Published on: 
Summary

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என கைப்பற்றியது.

அடுத்து நடைபெறும் டி20 தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி முதலில் களமிறங்குகிறது.

X