

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
இதையடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ஓவலில் நடைபெற உள்ளது.
லண்டனில் இந்திய நேரப்படி நாளை மாலை 3 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லருக்கு பதிலாக டேன் லாரன்ஸ் இணைந்துள்ளார்.
இந்தப் போட்டியில் வெல்லும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.