இலங்கை டி20 தொடருக்குப்பின் ஐ.சி.சி. தரவரிசையில் 47 இடங்கள் முன்னேறிய இங்கிலாந்து வீரர்

இலங்கை தொடரில் 3 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார்.
ஜேமி ஓவர்டன்
ஜேமி ஓவர்டன்
Published on

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இலங்கையை இங்கிலாந்த ஒயிட்வாஷ் செய்தது. இதனால் ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து முதல் இடத்தை பிடித்தது.

இலங்கை தொடரில் அசத்திய ஓவர்டன்

அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஓவர்டன் சிறப்பாக பந்து வீசினார். அவர் முதல் போட்டியில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2-வது போட்டியில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 3-வது போட்டியில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம் ஐசிசி-யின் டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஓவர்டன் 53-வது இடத்தில் இருந்து 47 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரின் இந்த வருடத்தின் மிகச்சிறந்த ஐசிசி தரவரிசையாகும்.

பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது முதலிடம்

பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது (736 புள்ளிகள்) முதல் இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இங்கிலாந்தின் அடில் ரஷித் 4-வது இடத்திற்கு சரிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பாக 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

10-வது இடத்தில் பும்ரா

நாதன் எல்லீஸ் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வருண் சக்கரவர்த்தி 2 இடங்கள் சரிந்து 7-வது இடத்ில் உள்ளார். பாகிஸ்தானின் முகமது நவாஸ 8-வது இடத்தில் நீடிக்கிறார். அதேபோல் பும்ரா 10-வது இடத்தில் நீடிக்கிறார். இலங்கையின் வனிந்து ஹசரங்கா 2 இடங்கள் சரிந்து 9-வது இடத்தில் உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com