2வது டி20 போட்டி: இங்கிலாந்து வெற்றிபெற 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 158 ரன்கள் எடுத்தது.
2வது டி20 போட்டி: இங்கிலாந்து வெற்றிபெற 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்
Published on

பார்படாஸ்:

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என கைப்பற்றியது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பார்படாசில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். பாவெல் 43 ரன்கள் எடுத்தார். ஷெப்பர்ட் 22 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 158 ரன்களை எடுத்தது.

இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமுது, மூஸ்லே, லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 159 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com