3வது டி20 போட்டி: இலங்கையை 124 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
pathum nissanka
Published on
Summary

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

டி20 தொடரை வென்ற இங்கிலாந்து

முதல் இரு போட்டிகளில் வென்ற இங்கிலாந்து 2-0 என டி20 தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அதிரடியாக ஆடினார்.

அவர் 24 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

கமிந்து மெண்டிஸ் ஓரளவு தாக்குப் பிடித்து 35 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில், இலங்கை அணி 18.5 ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்

இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், வில் ஜாக்ஸ், சோனி பேக்கர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com