3வது டி20 போட்டி: ஆஸ்திரேலியாவை 108 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து

இங்கிலாந்தின் ஜேமி ஓவர்டன் 5 விக்கெட் வீழ்த்தினார்.
jamie overton
Published on: 
Summary

மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 108 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என கைப்பற்றியது. 2 போட்டிகளில் இரு நாடுகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் சமனிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. அதிகபட்சமாக சாம் ஹார்பர் 14 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். ஜேக் பிரேசர் 22 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 108 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து சார்பில் ஜேமி ஓவர்டன் 5 விக்கெட்டும், லியாம் டாசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

X