3வது போட்டியில் வெற்றி: டாம் பாண்டன் சதம் - இலங்கையை சுருட்டி ஒருநாள் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து

இங்கிலாந்தின் டாம் பாண்டன் சதமடித்து 126 ரன்னில் அவுட்டானார்.
england
Published on: 
Summary

இலங்கைக்கு எதிரான 3வது போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தும், 2பது ஒருநாள் போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி லீட்சில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

டாம் பாண்டன் சதம்

அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 355 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் டாம் பாண்டன் பொறுப்புடன் ஆடி சதமடித்து 126 ரன்னில் அவுட்டானார்.

ஹாரி புரூக் அரை சதம் கடந்து 77 ரன்னும், ஜோர்டான் காக்ஸ் 76 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி சார்பில் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும், சச்சிந்து கொலம்பகே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இமாலய இலக்கு

இதையடுத்து, 356 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

குசால் மெண்டிஸ் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், இலங்கை அணி 29.1 ஓவரில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 123 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

டாசன் 3 விக்கெட்

இங்கிலாந்து சார்பில் லியாம் டாசன் 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன் விருது டாம் பாண்டனுக்கும், தொடர் நாயகன் விருது வில் ஜேக்சுக்கும் அளிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com