3வது டி20 போட்டி: டக்வொர்த் லீவிஸ் முறையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது இங்கிலாந்து

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 108 ரன்களில் ஆல் அவுட்டானது.
jordan cox
Published on: 
Summary

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என கைப்பற்றியது. 2 போட்டிகளில் இரு நாடுகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் சமனிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. அதிகபட்சமாக சாம் ஹார்பர் 14 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். ஜேக் பிரேசர் 22 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 108 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து சார்பில் ஜேமி ஓவர்டன் 5 விக்கெட்டும், லியாம் டாசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 5 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் ஹாரி புரூக் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய அனூரின் டொனால்டு 13 பந்தில் 33 ரன் குவித்து ஆட்டமிழந்தார். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.

இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 16 ஓவரில் 93 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இறுதியில், இங்கிலாந்து 8.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஜோர்டான் காக்ஸ் 14 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

X