அனூரின் டொனால்டு அதிரடி: 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளிய இங்கிலாந்து

இங்கிலாந்தின் அனூரின் டொனால்டு ருத்ர தாண்டவம் ஆடி 32 பந்தில் 9 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 85 ரன்கள் குவித்தார்.
aneurin donald
Published on: 
Summary

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என கைப்பற்றியது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி குயின்ஸ்லாண்டில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியா 184 ரன் குவிப்பு

அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. நிகில் சவுத்ரி 35 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஜோயல் டேவிஸ் 25 பந்தில் 39 ரன்கள் குவித்தார்.

இங்கிலாந்து சார்பில் சாம் கரன், குரோகாம்பே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அனூரின் டொனால்ட் அதிரடி

இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப்ஸ் சால்ட், அனூரின் டொனால்டு ஜோடி இறங்கியது. இந்த ஜோடி அதிரடியாக ஆடியது.

குறிப்பாக, அனூரின் டொனால்டு ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 32 பந்தில் 9 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பிலிப்ஸ் சால்ட் அரை சதம் கடந்து 58 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 13.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கிறது.

X