பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 2ம் நாள் முடிவில் இங்கிலாந்து 366/8

இங்​கிலாந்​து சார்​பில்​ ஹாரி புரூக், ஜோ ரூட், ஜோர்டன் காக்ஸ் அரை சதம் கடந்தனர்​.
brook
Published on

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 366 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

பாகிஸ்​தான்​ 171 ரன்​களுக்கு ஆல் அவுட்

அதன்படி, முதலில்​ பேட்​ செய்​த பாகிஸ்​தான்​ அணி 48.1 ஓவரில் 171 ரன்​களுக்கு ஆல் அவுட்டானது. அப்​துல்​லா ஷபிக்​ பொறுப்புடன் ஆடி 61 ரன்களும், இமாம்​ உல்​ஹக்​ 42 ரன்களும் எடுத்தனர்.

ஆலி ராபின்​சன், ஜோஷ் டங்​ 5 விக்கெட்

இங்​கிலாந்​து சார்​பில்​ ஆலி ராபின்​சன், ஜோஷ் டங்​ தலா 5 விக்கெட் வீழ்த்தினர்​.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. எமிலியோ 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோர்டன் காக்ஸ், கேப்டன் ஜோ ரூட் ஜோடி இதுவரை 64 ரன் சேர்த்துள்ளது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 25 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. ஜோர்டன் காக்ஸ் 23 ரன்னும், கேப்டன் ஜோ ரூட் 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், மழை காரணமாக நேற்றையை ஆட்டம் தாமதமாகியது. சிறப்பாக ஆடிய ஜோர்டன் காக்ஸ், ஜோ ரூட் அரை சதம் கடந்தனர்.

3வது விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோர்டன் காக்ஸ் 73 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஜோ ரூட் 66 ரன்னில் வெளியேறினார்.

ஹாரி புரூக் அதிரடி

அடுத்து இறங்கிய ஹாரி புரூக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். டான் லாரன்ஸ் 51 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 366 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தானை விட 195 ரன் முன்னிலை வகிக்கிறது.

பாகிஸ்தான் சார்பில் அலி உஸ்மான் 5 விக்கெட் வீழ்த்தினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com