சாம் கர்ரன் அசத்தல் பந்துவீச்சு - இங்கிலாந்து வெற்றிக்கு 113 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 112 ரன்களை எடுத்தது.
சாம் கர்ரனை பாராட்டும் சக வீரர்கள்
சாம் கர்ரனை பாராட்டும் சக வீரர்கள்
Published on

பெர்த்:

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி நிதானமாக ஆடியது. இப்ராகிம் சட்ரன் 32 ரன்கள் எடுத்தார்.

உஸ்மான் கனி பொறுப்புடன் ஆடி 30 ரன்களை எடுத்தார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவரில் 112 ரன்களில் சுருண்டது.

இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரன் 5 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com