லார்ட்ஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 110 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்

தொடக்க வீரர் அசான் அவைஸ் அதிகபட்சமாக 46 ரன்கள் சேர்த்தார்.
இங்கிலாந்து வீரர்கள்
இங்கிலாந்து வீரர்கள்
Published on
Summary

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்கள் எடுத்த நிலையில், பாகிஸ்தான் 110 ரன்களில் சுருண்டுள்ளது.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஜோர்டன் காக்ஸ் 55 ரன்களும், ஜேமி ஸ்மித் 61 ரன்களும், கஸ் அட்கின்சன் 45 ரன்களும் அடித்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அபப்ாஸ் 4 விக்கெட்டும், முகமது அலி 3 விக்கெட்டும் வீழ்த்தினர். குர்ரம் ஷேசாத் மற்றும அலி உஸ்மான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்

பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஷான் மசூத் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அப்துல்லா ஷபிக் 5 ரன்களிலும், பாபர் அசாம் 8 ரன்களிலும், சாத் ஷகீல் 16 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 7 ரன்களிலும், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மற்றொரு தொடக்க வீரர் அசான் அவைஸ் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அலி உஸ்மான், குர்ரம் ஷேசாத் தலா ஒரு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இமாம்-உல்-ஹக் காயம் காரணமாக களம் இறங்காததால் பாகிஸ்தான் 110 ரன்களில் சுருண்டது. பாகிஸ்தான் அணியால் 37.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com