3வது டி20 போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
England Players
Published on

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இவற்றில் நடந்த டி20 தொடரை இங்கிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

முதல் இரு போட்டிகளில் வென்ற இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து:

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அதிரடியாக ஆடினார். இவர் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

கமிந்து மெண்டிஸ் மட்டும் ஓரளவு தாக்கு பிடித்து 35 ரன்களை சேர்த்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் யாரும் இரட்டை இலக்க ரன்களை கூட அடிக்கவில்லை. இதன் காரணமாக இலங்கை அணி 18.5 ஓவர்களில் வெறும் 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், வில் ஜாக்ஸ், சோனி பேக்கர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். லியம் டாசன் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

இங்கிலாந்து அதிரடி பேட்டிங்:

சற்றே எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் களமிறங்கிய டொனால்டு 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பிறகு களமிறங்கிய ஹாரி புரூக் 33 ரன்களை விளாசினார். 9.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது.

இதனால் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

X

Maalai Malar
www.maalaimalar.com