டி20 கிரிக்கெட்டில் தமிழக வீராங்கனை கமலினி சதம் விளாசல்

சிக்ஸ் மூலம் 57 பந்தில் சதத்தை தொட்டார்.
கமலினி
கமலினி
Published on: 

பெண்களுக்கான உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் லக்னோவில் நடைபெற்று வரும் போட்டியில் தமிழ்நாடு- குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன.

முதலில் தமிழ்நாடு பேட்டிங் செய்தது. குணாலன் கமலினி, தயாளன் ஹேமலதா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். ஹேமலதா 20 ரன்கிளல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுபாஹரினி 3 ரன்களிலும், ஸ்ரீநிதி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

கமலினி சதம்

ஆனால் கமலினி 59 பந்துகளில் 101 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, 6 சிக்சர்கள் அடங்கும். கமலினி 57 பந்துகளில் சிக்சர் மூலம் 100 ரன்களை எட்டினார்.

இவரது சதத்தால் தமிழ்நாடு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்துள்ளது.

X