15வது திருமண நாளை கொண்டாடிய தோனி- சாக்ஷி: வைரலாகும் வீடியோ

15வது திருமண நாளை கொண்டாடிய தோனி- சாக்ஷி: வைரலாகும் வீடியோ

திருமண நாளை தோனி - சாக்ஷி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எம்.எஸ்.தோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

இந்த நிலையில், இன்று தங்களது 15வது திருமண நாளை தோனி - சாக்ஷி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமண நாளை ஒட்டி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், சாக்ஷி வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தோனியின் ரசிகர்கள் இருவரைக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com