WPL 2026: உ.பி.யை வீழ்த்தி எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி

முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 122 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
WPL 2026: உ.பி.யை வீழ்த்தி எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி
Published on

வதோதரா:

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 20-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்தது. தீப்தி ஷர்மா 24 ரன்னும், ஷிகா பாண்டே 23 ரன்னும், சிம்ரன் ஷேக் 22 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற டெல்லி அணி எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியது.

லாரா வால்வோர்ட் 47 ரன்னில் அவுட்டானார். ஷபாலி வர்மா 29 ரன்னில் வெளியேறினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com