மகளிர் பிரீமியர் லீக்: மும்பை இந்தியன்சை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது டெல்லி கேப்பிடல்ஸ்

முதலில் ஆடிய மும்பை அணி 19.1 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.அடுத்து ஆடிய டெல்லி அணி கடைசி பந்தில் 2 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது.
மகளிர் பிரீமியர் லீக்: மும்பை இந்தியன்சை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது டெல்லி கேப்பிடல்ஸ்
Published on

வதோதரா:

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 19.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த மும்பை 164 ரன்களில் ஆல் அவுட்டானது. நாட் சீவர் பிரண்ட் 80 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக ஆடி 22 பந்தில் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

டெல்லி சார்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 18 பந்தில் 43 ரன்கள் குவித்தார். நிக்கி பிரசாத் 35 ரன்னும், சாரா பிரைஸ் 10 பந்தில் 21 ரன்னும் எடுத்தனர். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது.

இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com