ஐபிஎல் 2027: டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்தா வாஸ் நியமனம்

சமிந்தா வாஸ் 2008 முதல் 2010 வரை ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார்.
chaminda vaas
Published on: 
Summary

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம் கோவாவில் நடத்தப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாசை வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

கடந்த இரண்டு சீசன்களில் இந்தப் பொறுப்பில் இருந்த முனாப் படேலுக்குப் பதிலாக சமிந்தா வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமிந்தா வாஸ் இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 355 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். மேலும், சர்வதேச அளவில் பயிற்சியாளராகவும் அனுபவம் பெற்றவர் இவர்.

சமிந்தா வாஸ் 2008 முதல் 2010 வரை ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். அவரது அனுபவமும், ஸ்விங் பந்துவீச்சில் உள்ள நிபுணத்துவமும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சுப் பிரிவை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com