நேபாள கிரிக்கெட் அணிக்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக டேல் ஸ்டெயின் அறிவிப்பு

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 184 ரன்கள் குவித்தது.நேபாளம் அணி 180 ரன்கள் அடித்து தோல்வியடைந்தது.
நேபாள கிரிக்கெட் அணிக்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக டேல் ஸ்டெயின் அறிவிப்பு
Published on

டி20 உலகக் கோப்பை தொடரின் 5வது லீக் ஆட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, நேபாளம் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. பெத்தேல், ஹாரி புரூக் அரை சதம் கடந்தனர்.

அடுத்து ஆடிய நேபாளம் இலக்கை எட்டிப்பிடிக்கும் வகையில் சிறப்பாக விளையாடியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்ட நிலையில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நேபாளம் அணி 4 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது.

நேபாள அணியினரின் சிறப்பான ஆட்டத்துக்கு இங்கிலாந்து கேப்டன் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் இங்கிலாந்தை கதிகலங்க வைத்த நேபாள் அணிக்கு, தனது சேவைகள் தேவைப்பட்டால் வழங்கத் தயாராக உள்ளதாக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com