ரூ.10 போதும்... மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் ஐபிஎல் போட்டியை பார்த்து ரசிக்கலாம்

வடபழனி விம்கோ நகர், சென்ட்ரல், நந்தனம், திருமங்கலம் பகுதிகளில் போட்டிகளை காணலாம்.ரூ.10 கட்டணம் செலுத்தி ரெயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டிகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.10 போதும்... மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் ஐபிஎல் போட்டியை பார்த்து ரசிக்கலாம்
Published on

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அகமதாபாத்தில் கடந்த 31- ந் தேதி தொடங்கியது. இதுவரை 5 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 6-வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை காண மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டிகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்.இ.டி. டிவிகள் மூலம் ரெயில் நிலையம் உள்ளே ஐபிஎல் போட்டி ஒளிபரப்பப்படுகிறது.

வடபழனி விம்கோ நகர், சென்ட்ரல், நந்தனம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் ரூ.10 கட்டணம் செலுத்தி போட்டிகளை காணலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com