பாராளுமன்ற உறுப்பினரை மணக்கும் இந்திய வீரர் ரிங்கு சிங்? வைரலாகும் புகைப்படம்

ரிங்கு சிங்கிற்கு சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ரிங்கு சிங்கை கொல்கத்தா அணி ரூ.13 கோடிக்கு தக்கவைத்துள்ளது
பாராளுமன்ற உறுப்பினரை மணக்கும் இந்திய வீரர் ரிங்கு சிங்? வைரலாகும் புகைப்படம்
Published on: 

இந்திய வீரர் ரிங்கு சிங், 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 5 சிக்ஸ்சர்கள் விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார். அந்த அதிரடியின் மூலம் இந்திய அணிக்கு கெத்தாக இடம் பிடித்தவர் ரிங்கு சிங். இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ரிங்கு சிங்கை கொல்கத்தா அணி ரூ.13 கோடிக்கு தக்கவைத்துள்ளது

இந்நிலையில் ரிங்கு சிங்கிற்கு சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப்ரியா சரோஜ் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரிங்கு சிங் இந்திய அணிக்காக 30 டி20 போட்டிகளும் 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி 500 ரன்களை எடுத்துள்ளார். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com