மோதிக் கொண்டதால் மூளையதிர்ச்சி: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து கான்வே விலகல்

கான்வே- ஹென்ரி நேருக்குநேர் மோதிக் கொண்டதால் காயம்.
கான்வே
கான்வே
Published on: 

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கடந்த புதன் கிழமை நடைபெற்றது.

கேட்ச் பிடிக்கும்போது காயம்

அதற்கு முன்னதாக நியூசிலாந்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது டேவன் கான்வே- மாட் ஹென்ரி பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் இருவருக்கும் தலையில் அடிபட்டது.

இதனால் உடனடியாக அவர்கள் வெளியேறினார். அணி மருத்துவர் அவர்களை பரிசோத்தபோது அவர்களுக்கு மூளையதிர்ச்சி (concussion) ஏற்பட்டது தெரியவந்தது.

இதனால் நன்றாக ஓய்வு வழங்கப்பட்டது. இதன்காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் அவர்கள் விளையாடவில்லை. நாளை 2-வது போட்டி நடைபெற இருக்கிறது.

மாட் ஹென்ரி தனக்கு பிரச்சினை ஏதும் இல்லை. நன்றாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மருத்துவர்களும் விளையாட அனுமதி அளித்துள்ளனர்.

தொடர் முழுவதிலும் இருந்து விலகல்

ஆனால் டேவன் கான்வே இன்னும் மூளையதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீளவில்லை எனத் தெரிகிறது. இதனால் அவர் எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார்.

நிக் கெல்லி

அவருக்குப் பதிலாக நிக் கெல்லி அணியின் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக 4-வது மற்றும் 5-வது போட்டிக்கான அணியில் இடம் பிடித்திருந்தார். தற்போது 2-வது போட்டியில் இருந்து அணியில் இணைந்துள்ளார். இதனால் நியூசிலாந்து ஏ அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

X