

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையல், நாளை முதல் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஏற்கனவே நியூசிலாந்து அணியில் இடம் பிடித்திருந்தது ரச்சின் ரவீந்திரா தோள்பட்டை காயத்தில் இருந்து குணம் அடையாததால் அணியில் இருந்து விலகினார். அதேபோல் மார்க் சேப்மேன் ஹாம்ஸ்டிரிங் பிரச்சனையில் விலகினார்.
இன்று நியூசிலாந்து அணியினர் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது கான்வே மற்றும் மாட்ரி ஹென்ரி பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதனால் கான்வே மைதானத்தில் இருந்து வெளியேறினார். பிசியோ அவரை சோதனை நடத்தினார். அப்போது மோதியதால் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது. இதனால் நாளை நடைபெறும் முதல் போட்டியில் கான்வே விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டிம் ஷெய்பெர்ட் தொடக்க வீரராக களம் இறங்குவார் என கேப்டன் மிட்செல் சாட்னர் தெரிவித்துள்ளார்.
4-வது மற்றும் கடைசி போட்டிக்கான நியூசிலாந்து அணியில் ஷெய்பெர்ட் இடம் பிடித்திருந்தார். காயம் காரணமாக ரச்சின் ரவீந்திரா மற்றும் மார்க் சேப்மேன் விலகியதால் டிம் ஷெய்பெர்ட் அனைத்து போட்டியிலும் விளையாடும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது கான்வே விலகியதால் தொடக்க வீரராக களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடரில் அதை மனதில் வைத்து விளையாடுவோம் என்று இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துளளார். இங்குள்ள சூழ்நிலை ஏறத்தாழ தென்ஆப்பிரிக்காவின் சூழ்நிலைக்கு ஒத்துப் போவதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.