சேப்பாக்கம் டெஸ்ட்: அஸ்வின் சுழலில் சிக்கிய வங்கதேசம் - வெற்றியை நெருங்கும் இந்தியா

2 ஆவது இன்னிங்ஸ் முடிவில் மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.2 ஆவது இன்னிங்சில இந்தியா தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ashwin - jadeja
Published on

இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வின் சதத்தால் 376 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது.

பின்னர் 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 4 விக்கெட் இழப்பிற்க 287 ரன்கள் அடித்திருக்கும்போது 2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

2 ஆவது இன்னிங்ஸ் முடிவில் மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பின்னர் 515 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வங்கதேச அணி 2 ஆவது இன்னிங்சில் களம் இறங்கியது.

3-வது நாள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் சாண்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் முன்கூட்டியே 3-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

வங்காளதேசம் வெற்றி பெற இன்னும் 357 ரன்கள் அடிக்க வேண்டும். அதே சமயம் இந்தியா வெற்றி பெற 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இன்னும் 2 நாட்கள் மீதமிருப்பதால் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com