ஜேமிசனுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தென்ஆப்பிரிக்க வீரர் தேர்வு

அவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக நான்கு 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்து உள்ளது.
ஜேமிசனுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தென்ஆப்பிரிக்க வீரர் தேர்வு
Published on

சென்னை:

நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் கெய்ல் ஜேமிசன். அவரை ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.1 கோடிக்கு எடுத்தது. ஆனால் காயம் காரணமாக ஜேமிசன் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீரர் சிசந்தா மகலாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்து உள்ளது. மகலா தென் ஆப்பிரிக்க அணிக்காக நான்கு 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com