பும்ரா கிடையாது: கிரிக்கெட்டின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இவர்தான்- பிரைன் லாரா

அவர் மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. என்னைப் பொறுத்தவரை உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் அவர் தான் என லாரா கூறினார்.
பும்ரா கிடையாது: கிரிக்கெட்டின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இவர்தான்- பிரைன் லாரா
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டியுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜேம்ஸ் ஆன்டர்சன் சமகால கிரிக்கெட்டில் விளையாடும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அவரது புள்ளிவிவரங்கள் அற்புதமானவை மற்றும் அவர் இங்கிலாந்துக்காக நிறைய செய்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவரது மனதில் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவரது கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்கள் அப்படி நினைத்தால், அது அப்படியே இருக்கட்டும்.

அவர் இங்கிலாந்து அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். மேலும் அவர் தனது கடைசி போட்டியில் விளையாடுவதன் காரணமாக அலட்சியமாக இருப்பார் என நான் நினைக்கவில்லை. அவர் மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. என்னைப் பொறுத்தவரை உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளச்ர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான்.

என லாரா கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com