டி20 உலகக்கோப்பை 2024: முக்கிய வீரர் இல்லாமல் நெதர்லாந்து அணி அறிவிப்பு

இளம் அதிரடி வீரர் மைக்கேல் லெவிட்டிற்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் இடம்கிடைத்துள்ளது. இளம் வீரர்களான டிம் பிரிங்கிள், கைல் கெலின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டி20 உலகக்கோப்பை 2024: முக்கிய வீரர் இல்லாமல் நெதர்லாந்து அணி அறிவிப்பு
Published on

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இதன் காரணமாக இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நெதர்லாந்து கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியில் அனுபவ வீரர்கள் ரோலோஃப் வான்டெர் மெர்வ் மற்றும் காலின் அக்கர்மேன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் இளம் வீரர்களான டிம் பிரிங்கிள், கைல் கெலின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் இளம் அதிரடி வீரர் மைக்கேல் லெவிட்டிற்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் இடம்கிடைத்துள்ளது. அதேசமயம் மேக்ஸ் ஓடவுட், ஆர்யன் தத், லோகன் வான் பீக், பால் வான் மீகெரன், விக்ரம்ஜித் சிங், வெஸ்லி பரேஸி, ஃபிரெட் கிளாசென், பாஸ் டி லீட் போன்ற நட்சத்திர வீரர்கள் தங்கள் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

நெதர்லாந்து அணி:

ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), ஆர்யன் தத், பாஸ் டி லீட், டேனியல் டோரம், ஃபிரெட் கிளாசென், கைல் கெலின், லோகன் வான் பீக், மேக்ஸ் ஓ'டவுட், மைக்கேல் லெவிட், பால் வான் மீகெரென், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமானுரு, டிம் பிரிங்கிள், விக்ரம்சித் சிங், விவ் கிங்மா, வெஸ்லி பாரேசி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com