டி20 கிரிக்கெட்டில் 8 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த பூடான் வீராங்கனை

முதலில் விளையாடிய பூடான் 127 ரன்கள் சேர்த்தது.பின்னர் மியான்மர் 45 ரன்னில் சுருண்டது.
டி20 கிரிக்கெட்டில் 8 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த பூடான் வீராங்கனை
Published on

பூடான்- மியான்மர் மகளிர் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய பூடான் 127 ரன்கள் அடித்தது. பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மியான்மர் களம் இறங்கியது.

ஆனால் பூடான் வீராங்கனை சோனம் யஷே பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 9.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 45 ரன்னில் சுருண்டது மியான்மர். இதனால் பூடான் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பூனம் யஷே 4 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட் கைப்பிற்றினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 4 ஓவர்களில் ஒரு ஓவர் மெய்டனாகவும் வீசினார்.

கடந்த 2023ம் ஆண்டு சீனாவுக்கு எதிராக மலேசியாவைச் சேர்ந்த சியாஸ்ருல் இத்ருஸ் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com