வீடியோ: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு வைரம் பதித்த மோதிரம்

இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்திய அணியின் வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு வைரம் பதித்த மோதிரத்தை பிசிசிஐ வழங்கியது.
வீடியோ: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு வைரம் பதித்த மோதிரம்
Published on: 

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் பிசிசிஐயின் நாமன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதற்கு பிசிசிஐ சார்பில் சிறப்பு 'சாம்பியன்ஸ் மோதிரம்' வழங்கப்பட்டது.

டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரரின் பெயரும் அவர்களது ஜெர்சி நம்பரும் பொறிக்கப்பட்ட வைரம் பதித்த மோதிரத்தை பிசிசிஐ வழங்கியது. இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com