பிக்பாஷ் இறுதிப்போட்டி: சிட்னி தண்டரை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ்

முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிக்பாஷ் இறுதிப்போட்டி: சிட்னி தண்டரை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ்
Published on

பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு வார்னர் தலைமையிலான சிட்னி தண்டரும் நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் தகுதி பெற்றது.

இந்நிலையில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் சங்கா 67 ரன்கள் குவித்தார். ஹோபார்ட் ஹரிகேன்ஸ் தரப்பில் கேப்டன் எல்லீஸ், ரிலே மெரிடித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் ஓவன்- காலேப் ஜூவல் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய ஓவன் 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com