இது புதுசா இருக்குண்ணே.. ஜூனியர் கிரிக்கெட்டில் நடந்த ரன் அவுட்.. வைரலாகும் வீடியோ

ஜூனியர் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கைப்பற்றியது.
இது புதுசா இருக்குண்ணே.. ஜூனியர் கிரிக்கெட்டில் நடந்த ரன் அவுட்.. வைரலாகும் வீடியோ
Published on

19 வயதுக்குட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ஜூனியர் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கைப்பற்றியது.

இதனையடுத்து இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜூனியர் தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 299 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 319 ரன்கள் எடுத்தது. 18 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து 336 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்துக்கு 319 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இந்நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இந்த போட்டி டிராவில் முடிந்தது.

முன்னதாக இந்த போட்டியில் துரதிஷ்டவசமாக இங்கிலாந்து வீரர் ரன் அவுட் ஆகியுள்ளார். ஜேசன் ரோல்ஸ் பந்து வீச்சில் ஸ்விப் ஆட முயன்ற போது சில்லி பாய்ண்ட்டில் நின்ற பீல்டரின் ஹெல்மெட்டில் பந்து வேகமாகபட்டு திரும்பி ஸ்டெம்பில் வந்து பட்டது. அந்த நேரத்தில் பேட்டர் ஆர்யன் சாவந்த் கிரிசுக்கு வெளியே இருந்தார். இதனால் அவர் ரன் அவுட் முறையில் வெளியேறினார்.

இது புதுவிதமான ரன் அவுட் ஆக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com