முதல் டெஸ்ட்: ரபாடா, முல்டர் வேகத்தில் சரிந்த வங்கதேசம்- 106 ரன்னில் ஆல் அவுட்

வங்கதேசத்தில் 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முதல் டெஸ்ட்: ரபாடா, முல்டர் வேகத்தில் சரிந்த வங்கதேசம்- 106 ரன்னில் ஆல் அவுட்
Published on

தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி, தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளையில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்தது.

உணவு இடைவேளை முடிந்து வந்த சிறிது நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளை வங்கதேசம் பறிகொடுத்தது. அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் ஜாய் 30 ரன்கள் எடுத்தார். 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசம் அணி 40.1 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com