3வது போட்டியிலும் வெற்றி - ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை ஒயிட் வாஷ் செய்தது வங்காளதேசம்

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.வங்காளதேசம் சார்பில் தஜுல் இஸ்லாம் 5 விக்கெட் வீழ்த்தினார்.
5 விக்கெட் வீழ்த்திய தஜுல் இஸ்லாம்
5 விக்கெட் வீழ்த்திய தஜுல் இஸ்லாம்
Published on

கயானா:

வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வங்காளதேசம் வென்றது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி கயானாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 48.4 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த நிகோலஸ் பூரன் 73 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

வங்காளதேசம் சார்பில் தஜுல் இஸ்ளாம் 5 விக்கெட்டும், நசும் அகமது, முஸ்தபிசுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 50 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் தமிம் இக்பால் 34 ரன் எடுத்தார். விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் 32 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச்செய்தார்.

இறுதியில் வங்காளதேசம் 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேசம் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

ஆட்ட நாயகன் விருது தஜுல் இஸ்லாமுக்கும், தொடர் நாயகன் விருது தமிம் இக்பாலுக்கும் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com