டேவிட் மலான் அதிரடி சதம்: வங்காளதேசம் வெற்றி பெற 365 ரன்களை நிர்ணயித்தது இங்கிலாந்து

டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பவுலிங் தேர்வு செய்தது.அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 364 ரன்களை குவித்தது.
டேவிட் மலான் அதிரடி சதம்: வங்காளதேசம் வெற்றி பெற 365 ரன்களை நிர்ணயித்தது இங்கிலாந்து
Published on

தர்மசலா:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இமாசலப்பிரதேசத்தின் தர்மசலாவில் 7வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. பேர்ஸ்டோவ், டேவிட் மலான் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய ஜோ ரூட், மலானுடன் இணைந்து அதிரடியை தொடர்ந்தார். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். டேவிட் மலான் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். ஜோ ரூட் அரை சதமடித்தார்.

2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மலான், ஜோ ரூட் 151 ரன்கள் சேர்த்தனர். மலான் 107 பந்தில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 68 பந்தில் ஒரு சிக்சர், 8 பவுண்டரி உள்பட 82 ரன்கள் சேர்த்தார்

இறுதியில், இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது.

வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com