சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் வங்கதேச வீரர் மெஹ்முதுல்லா

கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இருந்தும், 2021-ல் டெஸ்ட் கிரிக்கெடடில் இருந்தும் ஓய்வு பெற்றார்.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் வங்கதேச வீரர் மெஹ்முதுல்லா
Published on

வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டரான மெஹ்முதுல்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான மெஹ்முதுல்லா கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இருந்தும், 2021-ல் டெஸ்ட் கிரிக்கெடடில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்காக விளையாடினார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவருடைய ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் முடிவுக்கு வந்துள்ளது.

மெஹ்முதுல்லா 50 டெஸ்ட், 239 ஒருநாள் மற்றும் 141 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டியில் 5 சதங்களுடன் 2914 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 4 சதங்களுடன் 5689 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 2444 ரன்களும் அடித்துள்ளார்.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 43, ஒருநாள் கிரிக்கெட்டில் 82, டி20 கிரிக்கெட்டில் 41 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com