

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. மழை காரணமாக மதிய உணவு இடைவேளைக்குப் பிறகே போட்டிஆட்டம் தாமதமானது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 33.3 ஓவரில் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மஹிஜுல் இஸ்லாம் 23 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென், ககிசோ ரபாடா தலா 3 விக்கெட்டும், ஆன்ரிச் நூர்ஜே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரரும், பொறுப்பு கேப்டனுமான எய்டன் மார்கிரம் 21 ரன்னில் அவுட்டானார். ஆக்கர்மேன் 46 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.