ஷட்மன் இஸ்லாம், ஹசன் தமிம் அதிரடி: முதல் நாள் முடிவில் வங்கதேசம் 317/8

வங்கதேசம் சார்பில் ஷட்மன் இஸ்லாம், ஹசன் தமிம், லிட்டன் தாஸ் ஆகியோர் அரை சதம் கடந்தனர்.
shadman islam, hasan thamim
Published on: 
Summary

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது.

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அபுதாபியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதிரடி ஆரம்பம்

அதன்படி, வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷட்மன் இஸ்லாம், ஹசன் தமிம் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். இருவரும் அரை சதம் கடந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த நிலையில், ஹசன் தமிம் 71 பந்தில் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய மொமினுல் ஹக், ஷட்மன் இஸ்லாமுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 60 ரன்கள் சேர்த்த நிலையில் ஷட்மன் இஸ்லாம் 67 ரன்னில் அவுட்டானார்.

லிட்டன் தாஸ் அரை சதம்

மொமினுல் ஹக் 39 ரன்னும், ஷாண்டோ 29 ரன்னும் எடுத்தனர். அடுத்து வந்த வீரர்களில் லிட்டன் தாஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 53 ரன் எடுத்தார்.

இறுதியில், முதல் நாள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது.

ஆப்கானிஸ்தான் சார்பில் சலீம் சபி 3 விக்கெட்டும், யாமீன் அஹமத்சாய், இஸ்மத் ஆலம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com