பாகிஸ்தானுக்கு டஃப் கொடுத்த லிட்டன் தாஸ்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்

முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வங்கதேசம் வீழ்த்தியது.2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 274 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தானுக்கு டஃப் கொடுத்த லிட்டன் தாஸ்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்
Published on

ராவல்பிண்டி:

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்துசெய்யப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் நேற்று டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சை தொடங்கியது. முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் டக் அவுட்டானார். கேப்டன் ஷான் மசூத், தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் அரை சதம் கடந்தனர். ஷான் மசூத் 58 ரன்னிலும், சயீம் அயூப் 57 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஆகா சல்மான் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார்.

வங்கதேசம் அணி சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில், வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினர் துல்லியமாக பந்துவீசினர். இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் 26 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் திணறியது.

7-வது விக்கெட்டுக்கு இணைந்த லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. விரைவில் வங்கதேசத்தை வீழ்த்தி விடலாம் என நினைத்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு திறமையாக ஆடி பதிலடி கொடுத்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர்.

7வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 165 ரன்கள் சேர்த்த நிலையில், மெஹிதி ஹசன் 78 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 138 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத் 6 விக்கெட்டும், மீர் ஹம்சா, ஆகா சல்மான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com