2024-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதை வென்ற முதல் ஆப்கானிஸ்தான் வீரர்- ஓமர்சாய் சாதனை

ஐசிசி விருதை வென்ற முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஓமர்சாய் படைத்துள்ளார். ஐபிஎல் ஏலத்தில் ஓமர்சாயை ரூ.2.4 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.
2024-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதை வென்ற முதல் ஆப்கானிஸ்தான் வீரர்- ஓமர்சாய் சாதனை
Published on

துபாய்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த ஆண்கள் ஒருநாள் வீரராக ஆப்கானிஸ்தான் அணியின் ஓமர்சாயை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது. இதன்மூலம் ஐசிசி விருதை வென்ற முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஓமர்சாய் படைத்துள்ளார்.

அவர் கடந்த ஆண்டில் 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஒரு சதம் 3 அரைசதத்துடன் 417 ரன்கள் குவித்துள்ளார். பந்து வீச்சில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் ஓமர்சாயை ரூ.2.4 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com