மகளிர் உலகக் கோப்பை: அலிசா ஹீலி அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.முதலில் ஆடிய இந்திய அணி 48.5 ஓவரில் 330 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
மகளிர் உலகக் கோப்பை: அலிசா ஹீலி அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி
Published on

விசாகப்பட்டினம்:

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 48.5 ஓவரில் 330 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க வீராங்கனைகள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர். ஸ்மிருதி மந்தனா 80 ரன்னும், பிரதிகா ராவல் 75 ரன்னும் எடுத்தனர்.

ஹர்லின் தியோல் 38 ரன்னும், ஜெமிமா ரொட்ரிக்ஸ் 33 ரன்னும், ரிச்சா கோஷ் 32 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் அன்னபெல் சதர்லேண்ட் 5 விக்கெட்டும், சோபி மோலினக்ஸ்3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீராங்கனையும், கேப்டனுமான அலிசா ஹீலி அதிரடியாக அடி சதமடித்தார். அவர் 107 பந்தில் 142 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். எல்லீஸ் பெரி 47 ரன்னும், ஆஷ்லி கார்ட்னர் 45 ரன்னும், போபி லிட்ச்பீல்டு 40 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், ஆஸ்திரேலியா 49 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 331 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 3 விக்கெட்டும், தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com