3-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் இலக்கை 6.5 ஓவரில் கடந்த ஆஸ்திரேலியா

3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.இன்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் இலக்கை 6.5 ஓவரில் கடந்த ஆஸ்திரேலியா
Published on

வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 24.1 ஓவரில் 86 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பார்ட்லெட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 87 என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா 6.5 ஓவரில் 87 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 18 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com